
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில், கேரள மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
அவர்கள் ஊசிமலை காட்சிமுனையில் உள்ள வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென இருவரையும் தேனீக்கள் சூழ்ந்து கொண்டு கொட்டத் தொடங்கியுள்ளன. அதிக அளவிலான தேனீக்கள் கொட்டியதால் ஒரு இளைஞர் சுயநினைவை இழந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர், தேனீக்கள் கொட்டி படுகாயமடைந்த மற்றொரு இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேனிக்கள் கொட்டி சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.