நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுருளி அருவியில் குளிக்க அனுமதி

3 weeks ago 5

 

கம்பம், அக். 21: நீர்வரத்து சீரானதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக கம்பம் அருகே உள்ள சுருளி அருவி உள்ளது. மேலும் சுருளிப்பட்டியில் உள்ள வேலப்பர் கோயிலும் பிரசித்தி பெற்றது. இதனால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்கு குளிப்பதற்காக வந்து செல்வர்.

மேற்கு தொடர்ச்சி மலையின் மேகமலை வனப்பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளான தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று காலை முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் சுமார் 2 மணியளவில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுருளி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று வார விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

The post நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுருளி அருவியில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article