இன்புளூயன்சா ஏ எச்1என்1 வைரஸ் பரவல் அதிகரிப்பு

1 hour ago 1

சென்னை: தமிழகத்தில் இன்புளூயன்சா ஏ எச்1என்1 வைரஸ் பரவி வருவதாக பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மழைக்காலம் மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால், மக்களிடையே வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் 326 நபர்களிடம் நடத்தப்பட்ட வைரஸ் தொற்று குறித்து கடந்த மாதம் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் இன்புளூயன்சா ஏ எச்1என்1, இன்புளூயன்சா ஏ எச்3என்2, இன்புளூயன்சா பி உள்ளிட்ட 10 வைரஸ் பாதிப்புகளே அதிகமாக கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக இன்புளூயன்சா வைரஸ்களே 75.4 சதவிகித பேருக்கு சளி தொற்று ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக, 44 சதவீதம் பேருக்கு இன்புளூயன்சா ஏ வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு பெரும்பாலும் மழைக்காலங்களில் ஏற்படும் பரவலான பாதிப்புகளே என்றும், இது அச்சப்பட தேவையில்லை பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

The post இன்புளூயன்சா ஏ எச்1என்1 வைரஸ் பரவல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article