‘நீர்நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டமில்லை’

1 week ago 4

அணைக்கட்டு: வேலூரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே ஆதனூர்- குமாரமங்கலம் தடுப்பணை, புகலூர் கதவணை கிடப்பில் போட்டது குறித்து கொஞ்சம் கூட ஆதாரம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அவரால் தொடங்கப்பட்டது, ஆனால் சரியான ஆய்வு இல்லாமல் இடத்தை தேர்வு செய்துவிட்டார். அந்த திட்டம் செயல்படுத்த மறுஆய்வு செய்யவே பாதிப்பணம் போய்விட்டது. இதனை அவர் சட்டமன்றத்தில் பேசட்டும், நான் சரியான பதில் அளிக்கிறேன். நீர்நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் ஏதுமில்லை’ என்றார்.

The post ‘நீர்நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டமில்லை’ appeared first on Dinakaran.

Read Entire Article