நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?

1 month ago 11

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாமா? அவர்கள் ரத்த தானம் செய்தால், ரத்தம் பெறுபவர்களை பாதிக்காதா? என்று பலரும் கேட்பதுண்டு.

நீரிழிவு நோயாளிகள் ரத்ததானம் போன்ற தன்னலமற்ற செயலை தாராளமாக செய்யலாம். ஆனால், அவர்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ரத்த சர்க்கரை அளவு சாதாரண வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

கீழ்க்கண்ட காரணங்கள் இருப்பின் நீரிழிவு நோயாளிகள் ரத்ததானம் செய்யக்கூடாது.

1) ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள்.

2) சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு உள்ளவர்கள்.

3) இன்சுலின் ஊசி செலுத்தி கொள்பவர்கள்.

4) உடல் எடை 45 கிலோவிற்கும் குறைவானவர்கள்.

5) வயது 18-க்கும் குறைவானவர்கள்.

6) ரத்த கொதிப்பு கட்டுக்குள் இல்லாதவர்கள்.

7) ஹிமோகுளோபின் 12.5 கிராமுக்கும் குறைவாக உள்ளவர்கள்.

8) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.

9) காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு கடந்த 15 நாட்களுக்குள் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்கள்.

10) கடந்த 3 மாதங்களுக்குள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.

11) ஹெபடைட்டிஸ் பி அல்லது சி, மற்றும் எச்.ஐ.வி. நோய் தொற்றுள்ளவர்கள்.

நீரிழிவு நோயாளிகள் ரத்ததானம் செய்வது மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாது. மேலும் நீரிழிவு நோயாளிகள் 56 நாட்களுக்கு ஒருமுறை ரத்ததானமும் 7 நாட்களுக்கு ஒரு முறையும் பிளேட்ளட் தானமும் செய்யலாம். நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யலாம் என்றாலும், மேற்குறிப்பிட்ட காரணிகளை கருத்தில் கொள்வது முக்கியம்.

 

Read Entire Article