நீதிமன்றத்தில் தூய்மை பணி: நீதிபதி, வக்கீல்கள் பங்கேற்பு

3 months ago 18

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணிகள் நடைபெற வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ஊத்துக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை நீதிமன்ற நீதிபதி செந்தமிழ்செல்வன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்று, நீதிமன்ற வளாகத்தில் தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் முட்புதர் செடிகளை அகற்றி, தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். இதில், வக்கீல் சங்கத் தலைவர் வேல்முருகன், பொருளாளர் நரசிம்மன், மூத்த வழக்கறிஞர்கள் குணசேகரன், தினகரன், புருஷோத்தமன், வெற்றிதமிழன், மகேந்திரன், தலைமை எழுத்தர், நீதிமன்ற பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

The post நீதிமன்றத்தில் தூய்மை பணி: நீதிபதி, வக்கீல்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article