சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் ஆக.4-ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக கடந்த 1991-ம் ஆண்டு தமிழக அரசு பலரை பணியில் அமர்த்தியது.
பின்னர் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.