
புதுடெல்லி,
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 10-ம் தேதி துவங்கியது. வரும் 4 -ம் தேதி வரை நடக்க உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. மக்களவை கூடியதும்டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் சாக்கு பையில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதனால், கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதேபோல் மாநிலங்களவையிலும் அவை கூடியதில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை மதியம் 2 மணி வரை அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.