நீதித்துறைக்கு சவால் விடும் ‘தலைமறைவு’ நித்யானந்தா: பெண் சீடர் முன்ஜாமீன் வழக்கில் நீதிபதி கருத்து

6 months ago 39

மதுரை: தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் நித்யானந்தா என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பிடதியைச் சேர்ந்த நித்யானந்தாவின் சீடர் சுரேகா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘கணேசன் என்பவருக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை நித்யானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக என் மீதும், தர்மலிங்கம், ரதி ஆகியோர் மீதும் தேனி மாவட்டம் சேத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எங்கள் மீது பொய்யான புகாரின் பேரில் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

Read Entire Article