சென்னை: நீட் விலக்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா 2021 செப். 13ல் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்திய ஆளுநர், மசோதாவை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு திருப்பி அனுப்பினார். நீட் தொடர்பாக 2022 பிப். 5ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
நீட் விலக்கு மசோதா மீண்டும் 2022 பிப்.8ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்திருந்தார். அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
The post நீட் விலக்கு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் appeared first on Dinakaran.