டெல்லி: நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் பொதுத் தேர்வு அவசியம். இந்த தேர்வை மத்திய அரசின் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வுக்கு, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடு முழுதும் 550 நகரங்களில், 5,000க்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு நடக்கவுள்ளது. மே 4ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4ம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 011- 4075 9000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஹால் டிக்கெட்டில் தேர்வுக்கான மையம் குறிப்பிடப்பட்டிருக்கும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
The post நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.