சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக மாணவர் அணியினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாணவர் அணி செயலாளர் இரா.ராஜீவ் காந்தி தலைமையில் மாணவர் அணியினர் நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது, உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல்அளிக்கா மல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்ததை வரவேற்றும், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் உடனிருந்தார்.
The post நீட் தேர்வை அகற்ற சட்டபூர்வமான நடவடிக்கை; முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக மாணவர் அணி சந்திப்பு appeared first on Dinakaran.