
சென்னை,
நீட் தேர்வு தொடர்பாக வரும் 9-ம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக அரசு கூட்டும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தால் எந்த தீர்வும் ஏற்பட போவது இல்லை எனவும் இது ஒரு நாடகம் எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.