
சென்னை,
நாடு முழுவதும் 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் (பேப்பர்-பேனா) நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நீட் தேர்வு எழுத இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த நிலையில் நீட் எழுதவந்த மாணவர் ஒருவர் முழுக்கை டீசர்ட்டுடன் வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் அறிவுறுத்தலுக்கு பின் அவரின் அப்பா அணித்திருந்த அரைக்கை டீசர்ட்டை மாற்றிக் கொண்ட பின் தேர்வெழுத அனுமதி வழக்கப்பட்டது.