நீடாமங்கலம், அக்.23: நீடாமங்கலம் அருகில் உள்ள ஒரத்தூர் திரவுபதியம்மன் கோயில் எதிரே ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள டிரான்ஸ் பார்மர் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் சித்தமல்லி ஊராட்சியில் ஒரத்தூர் திரவுபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் எரிரே உள்ள குளக்கரையில் இரட்டை மின்கம்ப டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் பொருத்திய இரட்டை மின் கம்பங்கள் கடந்த ஓராண்டுகளாக சாய்ந்த நிலையில் உள்ளது. இங்கு கூடுதல் மழை அல்லது காற்று வீசினாலே அருகில் உள்ள குளத்தில் மின் கம்பம் சாய்ந்து விடும்.
அவ்வாறு சாய்ந்தால் குளத்தில் உள்ள நீரில் மின்சாரம் பாய்ந்து மனிதர்கள் மற்றும் கால் நடைகள் உள்ளிட்ட பல உயிர்கள் பலியாகும் ஆபத்தான நிலை உள்ளது. இந்த டிரான்ஸ் பார்மர் அருகேயுள்ள நியாய விலைக்கடை, குடிநீர் மேல்தேக்கத்தொட்டி, ஆதிதிராவிடல் நல தொடங்கப்பள்ளி உள்ளிட்ட சுமார் 400 குடும்பங்களுக்கு மின்சாரம் செல்கிறது. விபத்து ஏற்படாமல் இருக்க இந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என நீடாமங்கலம் உதவி மின் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பாக டிரான்ஸ்பரை நேரில் பார்வையிட்டு சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
The post நீடாமங்கலம் அருகே ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள டிரான்ஸ் பார்மர் appeared first on Dinakaran.