நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு

7 months ago 25

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மங்களூரின் புறநகரில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள ஒரு தனியார் பீச் ரிசார்டுக்கு விடுமுறை தினமான இன்று 3 இளம்பெண்கள் குளிக்க சென்றுள்ளனர் அப்போது எதிர்பாரா விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்துள்ள இளம் பெண்கள் மைசூரை சேர்ந்த நிஷிதா, பார்வதி மற்றும் கீர்த்தனா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article