
பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கிரிக்கெட்டில் ஏராளமான உலக சாதனைகளை படைத்து வருகிறார். இந்திய அணி அண்மையில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதில் முக்கிய பங்கினை ஆற்றினார்.
தற்போது ஐ.பி.எல். தொடருக்காக தயாராகி வரும் அவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் உங்களது கெரியரில் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "நான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் பும்ரா" என்று கூறினார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், "ஜஸ்பிரித் பும்ரா உலகின் அனைத்து வடிவங்களிலும் சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஐ.பி.எல்.-ல் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார். நாங்கள் இருவரும் வலை பயிற்சியில் மோதிக்கொண்டால் கூட தீவிரமாக இருக்கும். குறிப்பாக ஐ.பி.எல். போல நாங்கள் வலை பயிற்சியில் மோதிக்கொள்வோம். அவர் வீசும் ஒவ்வொரு பந்தும் மைண்ட் கேம் போல இருக்கும்" என்று கூறினார்.