நிலத்தின் அடியில் வெடிகுண்டை புதைத்து வைத்து வெடிக்கச் செய்து நக்சலைட்கள் சதிச்செயல் : 9 பேர் உயிரிழப்பு!!

1 day ago 2

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகினர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் குத்ரு சாலையில் வெடிகுண்டு வைத்து சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வாகனத்தை நக்சலைட்டுகள் தகர்த்தனர். நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பிறகு பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் ஸ்கார்பியோ வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​குத்ரு காவல் நிலையத்திற்குட்பட்ட அம்பேலி கிராமத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சி.ஆர்.பி.எஃப். வாகனத்தை குறி வைத்து நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஓட்டுனர் ஆகியோர் உயிரிழந்தனர். நிலத்தின் அடியில் வெடிகுண்டை புதைத்து வைத்து வெடிக்கச் செய்து நக்சலைட்கள் சதிச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் பலர் இந்த குண்டுவெடிப்பில் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் 5 நக்சல்கள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தாக்குதலில் குறைந்தது 100 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மதியம் 2:20 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினர் மீது நக்சலைட்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்று மேஜர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

The post நிலத்தின் அடியில் வெடிகுண்டை புதைத்து வைத்து வெடிக்கச் செய்து நக்சலைட்கள் சதிச்செயல் : 9 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article