நிலச்சரிவால் மூடப்பட்டிருந்த ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திறப்பு

3 hours ago 2


ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றையொட்டி தரம் குந்த் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. நஷ்ரி – பனிஹால் இடையே 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளை மண் மூடியதால் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மண் அகற்றப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதால் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை ஒருவழி போக்குவரத்துக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த இடங்களை சென்றடைய கத்ராவில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

The post நிலச்சரிவால் மூடப்பட்டிருந்த ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article