நிலக்கோட்டை, அக். 19: நிலக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது ஒன்றிய மாநாடு நடந்தது. மூத்த நிர்வாகி போத்திராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலாஜி, சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் காசிமாயன் வரவேற்றார்.
மூத்த நிர்வாகி போஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தீர்மானம் வாசித்தார். ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் வேலை அறிக்கையை முன் மொழிந்தார். மாநாட்டில் பள்ளபட்டி சிப்காட்டில் வடமாநில தொழிலாளர்களை தவிர்த்து உள்ளூர் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலை சுற்றுலா தலமாக தரம் உயர்த்த வேண்டும், கொடைரோடு சிறுமலை நீர்த்தேக்க அணையினை தூர்வாரி அன்ன சமுத்திர கண்மாயை நிரப்பி நிலத்தடி நீர் பாசனத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அணைப்பட்டி பிரிவிலிருந்து பேரணை சாலை வரையில் உள்ள சாலையை தார் சாலையாக அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், ராஜமாணிக்கம் வாழ்த்தி பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் பெரியசாமி, சுந்தர்ராஜன், மாலா தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாவட்ட செயலாளர் செல்வராஜ் நிறைவுரை நிகழ்த்தினார். ஒன்றிய குழு உறுப்பினர் குருசாமி நன்றி கூறினார்.
The post நிலக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு appeared first on Dinakaran.