தேர்​தலில் நீங்கள் தனித்து நில்லுங்கள் பார்ப்போம்: பேரவையில் திமுகவினரை பார்த்து செல்லூர் ராஜூ சவால்

4 hours ago 3

கடந்த 2016 தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றது அதிமுக. நீங்கள் நில்லுங்கள் பார்ப்போம் என்று சட்டப்பேரவையில் முனனாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திமுகவினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது: பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோளையும், கோட்பாட்டையும் நிறைவேற்றுவதாக இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒன்று கூட என் கண்ணுக்கு தெரியவில்லை. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ.3,500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிகளின் நிலை துல்லியமாக குறிப்பிடப்படவில்லை. அதேபோல், பாதிக்கும் குறைவாகவே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article