நிறைவேற்றாத ஒன்று, இரண்டு வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம்: பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2 hours ago 4

சென்னை: நிறைவேற்றாத ஒன்று, இரண்டு வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கொளத்தூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 17ம் தேதியும் விடுமுறை அறிவித்தோம். பொங்கல்தான் தமிழர்களுக்கான பண்டிகை என்றும் பெரியார் கூறினார். பொங்கல் பரிசாக திருக்குறளை தருகிறேன் எனக்கூறியவர் பெரியார். தமிழுக்காகவும், தமிழ் சமூகத்திற்காகவும் கடைசிவரை பாடுபட்டவர் பெரியார்.

பெண்களின் உரிமை உள்ளிட்டவற்றுக்காக பெரியார் தொடர்ந்து போராடி வந்தார். பெரியார் குறித்து அவதூறாக பேசுவோர் பற்றி பேசி, அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை. மகளிர் உரிமைத்தொகை, பெண்கள் இலவச பயணம் போன்ற திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. அதை ஒப்புக்கொள்கிறேன். நிறைவேற்றாத ஒன்று, இரண்டு வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதில் பின்வாங்க மாட்டோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post நிறைவேற்றாத ஒன்று, இரண்டு வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம்: பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article