"நிறம் மாறும் உலகில்" படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

3 hours ago 1

சென்னை,

இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி,யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

'நிறம் மாறும் உலகில்' திரைப்படம் வரும் மார்ச் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. யோகி பாபுவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. யோகி பாபுவின் கதாபாத்திர பெயர் நா முத்துகுமாராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Introducing @iYogiBabu as Na. MuthukumarThe name itself carries a legacy, and he's set to bring it to lifeThank you for being a part of #NiramMarumUlagilStarring ⭐@offBharathiraja @natty_nataraj @rio_raj @iamSandy_OffDirected by @brittoguruProduced by @gs_cinema pic.twitter.com/MyiMgeWUd7

— Signature Productionz (@Signaturepro01) February 3, 2025
Read Entire Article