நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்; பள்ளி மாணவியை சித்ரவதை செய்து பலாத்காரம்: ‘இன்ஸ்டா’ கொடூரன் நண்பருடன் கைது

3 hours ago 2


திருவனந்தபுரம்: இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 17 வயது பள்ளி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த இன்ஸ்டா காதலன், அவரது நண்பருக்கும் மாணவியை விருந்தாக்கியுள்ளார். 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் அமல் அகம்மது (22). கடந்த 2 வருடங்களுக்கு முன் இவருக்கு மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்கள் இருவரும் நெருக்கமானார்கள். அமல் அகம்மது அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக அடிக்கடி ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து நைசாக பேசி மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து தனது செல்போனில் அமல் அகம்மது பதிவு செய்து வைத்துள்ளார்.

இப்படியாக பல வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு அமல் அகம்மது ஒருநாள் தனது சுயரூபத்தை காண்பித்தார். மாணவியை தொடர்புகொண்டு பேசிய அமல் அகம்மது, நீ என்னுடன் பாலியல் உறவுக்கு வரவேண்டும், இல்லையென்றால் உனது ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி, அமல் அகம்மது கூப்பிட்ட இடங்களுக்கெல்லாம் சென்றுள்ளார். அங்கு வைத்து அமல் அகம்மது பலமுறை மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர் மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியும் வந்துள்ளார். இதுபோதாதென்று அமல் அகம்மதுவின் நண்பரான மலப்புரம் முண்டப்பரம்பு பகுதியை சேர்ந்த பஷீர் என்பவருக்கும் மாணவியை விருந்தாக்கியுள்ளார். இந்நிலையில் 2 பேரின் பாலியல் கொடுமையை தாங்கமுடியாத மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே இதுகுறித்து கோட்டக்கல் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று அமல் அகம்மது மற்றும் அவரது நண்பர் பஷீர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்; பள்ளி மாணவியை சித்ரவதை செய்து பலாத்காரம்: ‘இன்ஸ்டா’ கொடூரன் நண்பருடன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article