நியூசிலாந்துக்கு எதிரான போட்டி: ஆட்ட நாயகன் விருதை வென்ற வருண் சக்கரவர்த்தி

15 hours ago 3

துபாய்,

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில், இந்த போட்டி தொடரில் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ-வில் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்தியா வரும் 4ம் தேதி துபாயில் நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட நியூசிலாந்து வரும் 5ம் தேதி நடைபெறும் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.

இந்த நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.  

Read Entire Article