நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா

3 weeks ago 4

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியை சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் திணறடித்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இவர்களின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 16 ரன் எடுத்திருந்தது. ஜெயஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடம் களத்தில் இருந்தனர். இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்தியா, நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. இதில் கில் 30 ரன்னிலும், ஜெய்வால் 30 ரன்னிலும், கோலி 1 ரன்னிலும், பண்ட் 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் இந்திய அணி 83 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னெர், பிலிப்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து சர்பராஸ் கான் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகின்றனர்.

Read Entire Article