நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை முன்னணி வீரர் விலகல்

6 months ago 17

கொழும்பு,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. இதனால் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை முன்னணி வீரரான வனிந்து ஹசரங்கா விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டி20 போட்டியில் பந்துவீசும்போது இடது தொடை தசையில் ஹசரங்காவுக்கு காயம் ஏற்பட்டதால் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹசரங்காவுக்கு பதிலாக துஷான் ஹேமந்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Injury blow strikes Sri Lanka's ace spinner again as a hamstring problem rules him out of the ODI series against New Zealand.

Details https://t.co/oRy1eKwRto

— ICC (@ICC) November 12, 2024

Read Entire Article