நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: பும்ராவுக்கு ஓய்வளியுங்கள் - இந்திய முன்னாள் வீரர் அதிரடி கருத்து

2 months ago 14

மும்பை,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே புனேயில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டி 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான கருத்தை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ""பும்ராவுக்கு நிச்சயம் ஓய்வு அளிக்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது நடந்தே ஆக வேண்டும். முகமது சிராஜை அணியில் சேர்க்க வேண்டும். வேறு யாருக்கும் காயம் ஏற்படாத பட்சத்தில் அணியில் வேறு எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. மற்றபடி இரண்டாவது போட்டியில் ஆடிய அனைத்து பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களும் மூன்றாவது போட்டியிலும் ஆட வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article