நினைவு நாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

3 weeks ago 5

புழல்: எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு, புழல் 24வது வார்டு மேற்கு அதிமுக சார்பில் எம்ஜிஆர் மன்றம் புனித அந்தோணியார் நகர், லட்சுமி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 6 இடங்களில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 24வது வார்டு மேற்கு அதிமுக செயலாளர் விஜயன், வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, எம்ஜிஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புழல் ஜிஎன்டி சாலை அருகே உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு, 24வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சேட்டு, முன்னாள் நகர செயலாளர் கருப்புகொடி ஏழுமலை, அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் செங்குன்றம், பாடியநல்லூர், வடகரை, சோழவரம் காரனோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள எம்ஜிஆரின் சிலைகளுக்கு, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் எம்ஜிஆர் படத்திற்கு அதிமுக நகர செயலாளர் எஸ்டிடி.ரவி, ஒன்றிய செயலாளர் கோபால், ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், அபிராமன், முல்லைவேந்தன், சேகர், குணசேகரன், சுசீலா, ரவி, சூப் லட்சுமணன், சரவணன், சேதுபதி, உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் சுகுமார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதே பகுதியில் முன்னாள் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் கணபதி, ராமலிங்கம், எளாவூர் பகுதியில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் முல்லைவேந்தன் மரியாதை செலுத்தினர்.

The post நினைவு நாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article