கட்சி தொடங்கி ஓராண்டாக பரந்தூருக்கு நடிகர் விஜய் ஏன் செல்லவில்லை? - அண்ணாமலை கேள்வி

4 hours ago 1

நடிகர் விஜய் மக்களை சந்தித்தது அரசியலா அல்லது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையா, கட்சி தொடங்கி ஓராண்டாக பரந்தூருக்கு விஜய் ஏன் செல்லவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சென்னை விமான நிலையம் வெறும் ஆயிரம் ஏக்கரில் மட்டுமே அமைந்துள்ளது. டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்கள் 5 ஆயிரம் ஏக்கரிலும், பெங்களூரில் 4 ஆயிரம் ஏக்கரிலும் விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை வளர்ச்சி அடைந்து வருவதால், ஆயிரம் ஏக்கரை வைத்துக் கொண்டு விமான நிலையத்தை எப்படி நடத்த முடியும். சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு இரண்டரை கோடி பயணிகளை கையாளுகிறது. இதுவே அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10 கோடி பயணிகள் என்ற நிலை உருவாகும். எனவே, சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Read Entire Article