'நிதின் கெரியரில் சிறந்த படமாக இது இருக்கும்' - 'ராபின்ஹுட்' இயக்குனர்

2 days ago 2

ஐதராபாத்,

சலோ மற்றும் பீஷ்மா ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு இயக்குனர் வெங்கி குடுமுலா, நடிகர் நிதினுடன் காமெடி என்டர்டெய்னரான 'ராபின்ஹுட்' படத்தில் இணைந்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் இப்படம் வருகிற 28-ம் தேதி வெளியாக உள்ளது.

அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்து டோலிவுட்டில் அறிமுகமாகிறார் டேவிட் வார்னர்.

இந்நிலையில், இப்படத்தின் புரமோசனின்போது பேசிய இயக்குனர் வெங்கி, 'எனக்கு மட்டுமில்லாமல் நிதினின் கெரியரிலும் சிறந்த படமாக 'ராபின்ஹுட்' இருக்கும்' என்றார்.

மேலும், "படத்தின் முதல் 20 நிமிடங்களில் பல பரபரப்பான கதாபாத்திரங்கள் இருக்கும் என்றும் ராபின்ஹுட் ஒரு அவுட் அண்ட் அவுட் குடும்ப பொழுதுபோக்கு என்றும் கூறினார்.

Read Entire Article