நிதிநிறுவன சொத்துக்கள் ஏலம்

2 months ago 11

 

கரூர், நவ. 26: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான அசையான சொத்தான முக்கணாங்குறிச்சியில் அமைந்துள்ள குறிப்பிட்ட அளவுள்ள காலியிடத்தினை நவம்பர் 29ம்தேதி 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரம் பெற்ற அலுவலரால் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஏலம் கோர விரும்பும் நபர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கரூர் என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பெறப்பட்ட ரூ. 25 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அசையா சொத்து மற்றும் ஏல நிபந்தனைகள் விபரங்களை கரூர் மாவட்ட இணையதளத்தில் (www.karur.nic.in) காணலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நிதிநிறுவன சொத்துக்கள் ஏலம் appeared first on Dinakaran.

Read Entire Article