நிசான் இந்தியா நிறுவனம், மேக்னைட் சிஎன்ஜி காரை அறிமுகம் செய்துள்ளது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. இதில் மொத்தம் 6 வேரியண்ட்கள் உள்ளன. இந்த அனைத்து வேரியண்ட்களிலும் ஷோரூம் விலையை விட கூடுதலாக ரூ.75,000 செலுத்தி சிஎன்ஜி கிட் பொருத்திக் கொள்ளலாம். மோட்டோஜென் நிறுவனம் இந்த கிட்களை வழங்குகிறது.
இதற்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோ மீட்டர் வாரண்டியை கிசான் நிறுவனம் அளிக்கிறது. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.6.89 லட்சம். முதற் கட்டமாக டெல்லி, ஹரியானா, உ.பி, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஜூன் 1ம் தேதி முதல் இந்த கார்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நிசான் மேக்னைட் சிஎன்ஜி appeared first on Dinakaran.