கரூர், பிப். 11: க.பரமத்தியில் மக்கள் குறை தீர் கூட்டம் நாளை நடப்பதாக கலெக்டர் தெரிவித்தார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 21ம்தேதி முதல் பிப்ரவரி 4ம்தேதி வரை கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 8 வட்டாரங்களில் 40 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றன. இந்த முகாமில், 15 துறைகள் சார்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டன.
மேலும், பிப்ரவரி 12ம்தேதி க.பரமத்தி வட்டாரத்தில், சின்னதாராபுர் கிராமத்தில் அம்மன் மஹாலிலும், க.பரமத்தி வட்டாரம் புஞ்சைகாளக்குறிச்சி கிராமம் எல்லைமேடு புதூர் விகேடி மஹாலிலும், கருர் வட்டாரத்தில் வேட்டமங்கலம் கிராமம் செல்வநகர் சமூதாயக் கூடத்திலும், க.பரமத்தி வட்டாரத்தில பவித்திரம் கிராமம் பள்ளமருதுப்பட்டி சமுதாய கூடத்திலும், க,பரமத்தி வட்டாரம் குளம் நகரில் உள்ள செல்வக்குமார் மஹாலிலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்களில் தங்களின் கோரிக்கை தொடர்பான மனு அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாளை நடக்கிறது; க.பரமத்தியில் மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.