நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (20.06.2025)

2 weeks ago 3

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் நாளை (ஜூன் 20-ந் தேதி) திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

"குபேரா"

நடிகர் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப். ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அமீகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நாளை பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

"டி.என்.ஏ"

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி 'டி.என்.ஏ' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது.

"சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்"

விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ள படம் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்'. இதில் வைபவ், அதுல்யா ரவி, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி நிறைந்த இப்படம் நாளை வெளியாகிறது.

"சித்தாரே ஜமீன் பர்"

ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் அமீர் கான் நடித்துள்ள படம் 'சித்தாரே ஜமீன் பர்'. இதில், நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதில் அமீர் கான் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு கூடைப்பந்து விளையாட்டுப் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

"எலியோ"

எலியோ என்பது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸுக்காக பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த அனிமேஷன் திரைப்படமாகும். இப்படம் மேட்லைன் ஷராபியன், டோமி ஷி மற்றும் அட்ரியன் மோலினா ஆகியோரால் இயக்கப்பட்டது. இந்த படத்தில் ஒரு சிறுவன் விசித்திரமான வேற்றுகிரக வாசிகளுடன் இணைந்து சாகசங்களை மேற்கொள்கிறான்.

Read Entire Article