திருவொற்றியூர்: மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியின் 10 நாள் புரட்டாசி திருவிழா நாளை (4ம்தேதி) கொடி ஏற்றத்துடன் தொடங்கி 13ம்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை பால்பணிவிடை உகப்படிப்பும் காலை 6.30 மணிக்கு திருநாமக்கொடியும் ஏற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். தினமும் அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசன வாகனம், குதிரை, காமதேனு, பூபல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் வைகுண்ட தர்மபதி எழுந்தருளி பதிவலம் வருகிறார். தினமும் திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. 8வது நாளான 11ம்தேதி இரவு 8 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, 8.30 மணிக்கு திருக்கல்யாண திருடு வாசிப்பு நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ம்தேதி நடக்கிறது.
தேரோட்டத்தை தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், முன்னாள் எம்பிக்கள் எஸ்.ஆர்.ஜெயதுரை, எஸ்.ஞானதிரவியம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் செல்வராஜ் குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி.அருணாசலம், டி.விஜய் அருண், திருச்செந்தூர் அய்யா வைகுண்ட அவதாரபதி தலைவர் எஸ்.தர்மர், கோவை அய்யா வைகுண்டர் சிவபதி, கே.அரிராமன், எச்.ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ராஜேந்திரன், டி.எஸ்.எஸ்.நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.பி.மனோகரன், தொழிலதிபர்கள் எஸ்.ரங்கசாமி நாடார், பி.துரைப்பாண்டியன், பிரசாத் கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். விழா ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், பொதுசெயலாளர் ஏ.சுவாமிநாதன், பொருளாளர் பி.ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி.ஐவென்ஸ், துணை தலைவர் வி.சுந்தரேசன், இணை பொது செயலாளர் கே.ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
The post நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா: 13ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.