நாளை காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

3 months ago 20

தேனி, அக்.1: காந்தி ஜெயந்தியையொட்டி நாளை தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தி தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், காந்தி ஜெயந்தி தினத்தன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல் 3ஏ, எப்.எல்3 ஏஏ, உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் மூடியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

எனவே, நாளை காந்தி ஜெயந்தி தினத்தன்று தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் செயல்படக்கூடாது.  அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபானங்கள் விற்பனை ஏதும் மேற்கொள்ளக் கூடாது. காந்தி ஜெயந்தி தினத்தன்று விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மதுபானக் கடை பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post நாளை காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article