நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - (25.10.2024)

3 months ago 14

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்க்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், நாளை (25.10.2024) எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.

1. மெய்யழகன் : இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'மெய்யழகன்'. இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

2. ஹிட்லர் : நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'ஹிட்லர்'. இந்த படத்தை இயக்குனர் தனா இயக்கியுள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் திருட்டு, வரவிருக்கும் தேர்தல் மற்றும் ஒரு அழகான காதல் கதைக்கு மத்தியில் பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இப்படம் பிரைம், சிம்பிலி சவுத் மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது.

3. கடைசி உலகப் போர் : ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான படம் 'கடைசி உலகப் போர்'. போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடராஜ் என்ற நட்டியின் 'கிங் மேக்கர்' கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

4. ஐந்தாம் வேதம் : 90களின் பிரபலமான 'மர்மதேசம்' தொடரின் இயக்குனர் நாகா, 'ஐந்தாம் வேதம்' என்ற தலைப்பில் ஒரு சீரிஸ் இயக்கியிருக்கிறார். இந்த தொடர் புராணங்களை அடிப்படையாக கொண்ட திரில்லராக உருவாகி உள்ளது. விறுவிறுப்பாக காட்சிகளும், அதையொட்டிய மர்மங்களும் இருப்பதால் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தொடர் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

5. கிளாஸ்மேட்ஸ் : குடிகாரர்களுக்கான விழிப்புணர்வு படமாக `கிளாஸ்மேட்ஸ்' என்ற படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படத்தை ஷரவணசக்தி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இதில் நாயகனாக அங்கயற்கண்ணன், நாயகியாக பிரணா ஆகியோர் நடித்துள்ளனர். மயில்சாமி, சாம்ஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இப்படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

6. டோ பட்டி : கஜோல் மற்றும் கிருத்தி சனோன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'டோ பட்டி'. ஷஷாங்கா சதுர்வேதி இயக்கிய மற்றும் கனிகா தில்லான் எழுதிய இரட்டை சகோதரிகளின் இருண்ட ரகசியங்களை மறைக்கும் கதையை இப்படம் சொல்கிறது. இது திரில்லர் சஸ்பென்ஸ், போட்டி மற்றும் உணர்ச்சி சிக்கல்கள் நிறைந்த ஒரு தீவிரமான கதையாக உருவாகி உள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

7. டோன்ட் மூவ் : இது ஒரு அமெரிக்கா ஹாரர் திரில்லர் திரைப்படமாகும். இந்த படத்தை ஆடம் ஷிண்ட்லர் மற்றும் பிரையன் நெட்டோ ஆகியோர் இயக்கி உள்ளனர். கெல்சி அஸ்பில், பின் விட்ராக் மற்றும் டேனியல் பிரான்சிஸ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Read Entire Article