நார்வே செஸ் போட்டி: 7-வது முறையாக பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்

14 hours ago 6

ஸ்டாவஞ்சர்,

2025-ம் ஆண்டுக்கான நார்வே செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

இதில், அதிக புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடிக்கும் வீரர் வெற்றியாளராக கொள்ளப்படுவார். இந்நிலையில், 10-ம் சுற்று போட்டியில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளார். இதனால், கார்ல்சன் 7-வது முறையாக பட்டம் வென்றுள்ளார்.

இறுதி சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்கு சென்றார். கருவானா 2-வது இடத்தில் உள்ளார்.

10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்துள்ளார். கருவானா 15.5 புள்ளிகளுடனும் (2-வது இடம்), குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் (3-வது இடம்) உள்ளனர்.

இந்த போட்டியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 4-வது இடத்திலும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 5-வது இடத்திலும், சீனாவின் வெய் யி கடைசி இடத்திலும் உள்ளனர்.

Read Entire Article