நார்வே செஸ்: 4வது சுற்றில் குகேஷ் வெற்றி

1 day ago 2

ஸ்டாவஞ்சர்,

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), அர்ஜூன் எரிகைசி (இந்தியா) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

இதில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் குகேஷ், பாபியானோ கருனாவை (அமெரிக்கா) சந்தித்தார். 4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை முடிவு செய்ய நடந்த டைபிரேக்கரில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் பாபியானோ கருனாவுக்கு அதிர்ச்சி அளித்தார். குகேஷ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 

Read Entire Article