நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி பகுதிகளில் தேனி எம்பி ஆய்வு

1 hour ago 1

கம்பம்: கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி பகுதிகளில் தேனி எம்பி தங்கதமிழ்ச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். கம்பம் அருகேயுள்ளது நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி இங்கு சுமார் 2 ஆயிரத்து 100 வீடுகள் உள்ளன. இங்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 1 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் மற்றும் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக ஏற்கனவே இருந்த நீர் தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டன. இதனையடுத்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன . ஆனால் பணிகள் திடிரென நிறுத்தப்பட்டன. இதையடுத்து 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை. இதனால் ஊராட்சி பகுதிகளில் தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.மேலும் மேல்நிலை நீர் தொட்டி இல்லாததால் முல்லைப்பெரியாறு ஆற்றில் இருந்து நேரடியாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதால் காய்ச்சல் பரவுவதாக அதே ஊரில் குடியிருந்துவரும் தேனி எம்பி தங்கதமிழ்செல்வன் வீட்டிற்கு சென்று புகார் கொடுத்தனர்.

தொடர் புகார் காரணமாக நேற்று நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்ககளிலும் சாக்கடை கால்வாய், சாலைவசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அடிப்படை வசதிகள் குறித்து ஊராட்சி தலைவர் செல்லையா பொன்னுத்தாய், வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) கனி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜெயபிரகாசம், உதவிபொறியாளர் மற்றும் பணிமேற்பார்வையாளரிடம் கேட்டறிந்தார். பின்னர், மாவட்ட திட்ட அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும் என தேனி எம்பி உத்தரவிட்டார். அடிப்படை வசதிகளுக்கு ஊராட்சியில் நிதி பற்றாகுறை இருப்பின், எம்பி நிதியில் இருந்து நிதி பெற்றுவருவதாக கூறினார். பின்னர் ஊராட்சி நூலகம் அருகே நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி பகுதிகளில் தேனி எம்பி ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article