நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிர்வாகி மீது தாக்குதல் - வாணியம்பாடியில் பரபரப்பு

2 hours ago 2

வாணியம்பாடி: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த அக்கட்சியின் வடக்கு மாவட்டச்செயலாளர் வாணியம்பாடியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோது, அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். இதையடுத்து, 2018-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் வடக்கு மாவட்டச் செயலாளராக அவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தேவேந்திரன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர், அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, வாணியம்பாடியில் அவர் இன்று மாலை (வியாழன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தனர்.

Read Entire Article