நாமக்கல்: ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கல்லூரி பஸ்கள்

6 months ago 28

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளிப்பாளையத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் இரண்டு தனியார் கல்லூரி பஸ்கள் சிக்கிக் கொண்டன. பஸ்சின் டயர் மூழ்கும் அளவிற்கு சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி இருந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த சுமார் 40 மாணவர்கள் வெளியே வர முடியாமல் சுமார் அரை மணி நேரம் சிக்கித்தவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியினர் உதவியுடன் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரை அகற்றும் மோட்டார் கடந்த சில நாட்களாக சரியாக செயல்படாததால் மழைநீர் தேங்குவதாக கூறப்படுகிறது.  

Read Entire Article