நாமக்கல்: சரக்கு வாகனம்-லாரி மோதி விபத்து - 3 பேர் பலி

7 months ago 25

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரையை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரமேஷ். ஆட்டோ டிரைவரான இவர், நேற்று சரக்கு வாகனத்தில் மணவறை அலங்கார பொருட்களை (டெக்கரேஷன்) ஈரோடு அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இறக்கிவிட்டு அங்கிருந்து டெக்கரேசன் வேலையாட்களுடன் நள்ளிரவு 2 மணி அளவில் கபிலர்மலைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி எதிரே வந்த லாரியும், சரக்கு வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் சரக்கு வாகனம் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் டெக்கரேசன் வேலைக்கு வந்த சக்திநாதன்(18), சிவா(19), பூமிஷ்(20) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த டிரைவர் ரமேஷ், சாமிநாதன் ஆகியோர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Read Entire Article