நாமக்கல்: காவிரி ஆற்றில் மூழ்கிய 3 மாணவர்கள் சடலமாக மீட்பு

6 months ago 17

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பிலிக்கல்பாளையம் பக்கமுள்ள நகப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் வினித் விமல்ராஜ்(வயது 21). இவர், தனது நண்பர்களான தர்மபுரியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ரகுமான்  ஆகியோரை அழைத்துக்கொண்டு பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நகப்பாளையம் காவிரி ஆற்றில் நேற்று குளிக்கச்சென்றார். நீண்ட நேரமாகியும் மூவரும் வராததால் வினித்விமல்ராஜ் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் 3 பேரின் செருப்புகள் மற்றும் செல்போன்கள் கரையோரம் இருந்தன. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் தீயணைப்புத்துறையினரும் வந்தனர். மாயமான மாணவர்களையும் தீயணைப்பு துறையினர் நேற்று முதல் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான 3 மாணவர்களையும் தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர். 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஒரே கல்லூரியில் படித்து வந்த நண்பர்கள் 3 பேர் ஆற்றில் குளிக்கச்சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Read Entire Article