''நான்காண்டு கால ஆட்சியில் திமுக எதையும் செய்யவில்லை'' - கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

17 hours ago 3

கிருஷ்ணகிரி: நான்காண்டு கால ஆட்சியில் திமுக எதையும் செய்யவில்லை என்றும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, போதை பொருட்கள் நடமாட்டம் ஆகியவைதான் திமுக அரசின் 4 ஆண்டு சாதனைகள் என்றும் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த முனுசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ''உலக அரங்கில் இந்தியா வலிமைமிக்க நாடு என்பதை நிருபிக்கும் வகையில் பிரதமர் மோடியின் செயல்பாடு உள்ளது. அவரது அனுபவம், ராஜதந்திரத்தால் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி நடைபோடுகிறார். அதற்கு அதிமுக சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read Entire Article