நான் விரதம் இருக்கிறேன் சரி...நீ ஏன் இருக்கிறாய்?: வைரலாகும் சோனாக்சி சின்ஹா பகிர்ந்த வீடியோ

4 months ago 27

சென்னை,

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான நடிகை சோனாக்சி சின்ஹா, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் பல வருடங்களாக நடிகர் சாஹீர் இக்பால் என்பவரை காதலித்து வந்தார். சமீபத்தில், இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நடிகை சோனாக்சி- சாஹீர் இக்பால் தம்பதி தங்கள் முதல் கர்வா சௌத்தை (கரக சதுர்த்தி) கொண்டாடினர். கர்வா சௌத் என்பது வடமாநிலத்தில் உள்ள திருமணமான பெண்கள் கொண்டாடும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நாளில் திருமணமான பெண்கள், தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்காகவும் காலை முதல் மாலை வரை உண்ணாமல் விரதம் இருப்பார்கள்.

அவ்வாறு நடிகை சோனாக்சி சின்ஹாவும் தன் கணவருக்காக விரதம் இருந்துள்ளார். இந்நிலையில், சோனாக்சி சின்ஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சோனாக்சி சின்ஹா தனது தலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தொப்பி போன்ற ஒன்றை அணிந்திருந்தார். அப்போது கணவர் சாஹீர் இக்பால், சோனாக்சியிடம் என்ன செய்கிறாய் என்று கேட்க அதற்கு சோனாக்சி 'எனக்கு பசிக்கிறது, என்ன பண்ணுவது என்று தெரியவில்லை' என்கிறார்.

பின்னர் சோனாக்சி, கணவரிடம்' உனக்கு பசிக்கவில்லையா' என்கிறார். அதற்கு அவர்' ரொம்ப' என்கிறார். உடனே சோனாக்சி 'நான் விரதம் இருக்கிறேன் சரி...நீ ஏன் இருக்கிறாய்?' என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article