நான் முதல்வன் திட்டத்தில் ரயில்வே, வங்கி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்

2 weeks ago 2

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.சி, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, ‘நான் முதல்வன் எஸ்.எஸ்.சி மற்றும் ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை’ தொடங்கவுள்ளது.

எஸ்.எஸ்.சி ரயில்வே பயிற்சிக்கு 300 நபர்களும், வங்கி பணிகளுக்கு 700 நபர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பயிற்சியில் சேர ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 29 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மே 31ம் தேதி அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது ரயில்வே தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் மே13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

The post நான் முதல்வன் திட்டத்தில் ரயில்வே, வங்கி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article