நான் பும்ரா குறித்து மட்டும் நினைக்கவில்லை - ஆஸ்திரேலிய வீரர்

1 week ago 2

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக (0-3) இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வித்தியாசமான ஆக்சனில் பந்து வீசும் அவர் தற்சமயம் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக போற்றப்படுகிறார்.

இந்நிலையில் உண்மையிலேயே வித்தியாசமான பவுலிங் ஆக்சன் காரணமாக பும்ரா மிகவும் சவாலான பவுலர் என்று ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா கூறியுள்ளார். மேலும் பும்ராவை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடுவதற்கு தேவையான திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜஸ்ப்ரித் பும்ராவை முதல் முறையாக எதிர்கொண்டபோது அவருடைய ஆக்சன் காரணமாக வித்தியாசமாக இருந்தது. மற்ற பவுலர்களை காட்டிலும் அவருடைய பந்து ரிலீஸ் செய்யும் இடம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. பெரும்பாலான பவுலர்கள் வெள்ளைக் கோட்டுக்கு அருகே பந்தை வெளியிடுவார்கள். ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் முன்னதாக பந்தை வெளியிடுகிறார். அதனால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அவர் வீசும் பந்துகள் மிகவும் வேகமாக வருவது போல் உணர முடியும்.

இருப்பினும் அவருடைய பந்துகளை எதிர்கொண்டு பழகி விட்டால் அது நன்றாக ஆகிவிடும். அவருக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளேன். அவர் என்னை முதல் பந்திலேயே அவுட்டாக்க முடியாது என்று சொல்ல மாட்டேன். யார் வேண்டுமானாலும் என்னை முதல் பந்தில் அவுட்டாக்க முடியும். ஆனாலும் அவரை நீங்கள் முதல் முறையாக எதிர்கொள்ளும்போது கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். இருப்பினும் அவர் கிளாஸ் நிறைந்த பவுலர்.

ஷமியும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகவும் சிறந்த பவுலர். அவர் குணமடைந்து விளையாடும்போது இந்த தொடரில் சிறந்த பவுலராக செயல்படுவார். அவர் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட பவுலர். அவரைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. பின்னர் அவர்களிடம் நல்ல ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள்.

எனவே பும்ராவை பற்றி மட்டும் நான் நினைக்கவில்லை. அவருக்கு எதிராக எப்படி ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை பற்றி நினைக்கிறேன். ஒருவேளை அவர் நன்றாக பந்து வீசினால் அதை நான் மதித்து விளையாடுவேன். சரியாக பந்து வீசவில்லையெனில் அடித்து ரன்களை குவிப்பேன். எனவே அது நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டாக இருக்கும்" என்று கூறினார்.

Read Entire Article