நான் தொடக்க வீரராக விளையாடுவதை சக வீரர்கள் வெறுக்கிறார்கள் - ஸ்டீவ் சுமித் ஓபன் டாக்

3 months ago 13

சிட்னி,

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற பின், அந்த அணியில் ஸ்டீவ் சுமித் தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ஸ்டீவ் சுமித் தொடக்க வீரராக களமிறங்கி ஒரளவு நன்றாகவே பேட்டிங் செய்தார்.

ஆனாலும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் சுமித் நம்பர் 4ல் களமிறங்க வேண்டும் என்று பல ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் பேசத் தொடங்கினர்.

இந்த விவகாரம் குறித்து ஸ்டீவ் சுமித் பேசுகையில், " கேமரூன் கிரீன் காயமடைந்து விலகி இருப்பதால், மிடில் ஆர்டரில் ஒரு இடம் காலியாக உள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் லபுஷேன் மற்றும் கவாஜா உள்ளிட்டோரிடம் சில ஆலோசனையில் ஈடுபட்டேன். அவர்கள் நான் டாப் ஆர்டரில் விளையாடுவதை வெறுக்கிறார்கள். நான் நம்பர் 4ல் களமிறங்குவது அவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதேபோல் தொடக்க வீரராக களமிறங்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

நம்பர் 4ல் விளையாடி சில நல்ல சாதனைகளை செய்துள்ளேன். ஒருவேளை எந்த பேட்டிங் வரிசையில் பேட்டிங் செய்கிறார் என்று கேட்டால், நம்பர் 4 என்றுதான் சொல்வேன். ஆனால் எப்போதும் பேட்டிங் வரிசை பற்றியெல்லாம் கவலைக் கொண்டதில்லை. கடந்த வாரம் சில விஷயங்களை பார்த்தபோது, நம்பர் 4ல் விளையாட கோரிக்கை வைத்துள்ளேன். இருந்தாலும் எனது பேட்டிங் வரிசை பற்றி கவலையில்லை. தற்போது நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக நம்பர் 3ல் விளையாடி வருகிறேன். அந்த அனுபவமும் மகிழ்ச்சியாகவே உள்ளது" என்று கூறினார்.

Read Entire Article